பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
|ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சென்னை,
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் நடித்தனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது.
பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க பிரதீப் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு 'டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'டிராகன்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.