பிரபுதேவா நடித்துள்ள 'மை டியர் பூதம்' படத்தின் அப்டேட்..!
|நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'மை டியர் பூதம்' திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
குழந்தைகளை கவரும் வகையில், நடிகர் பிரபுதேவாவை வைத்து இயக்குனர் என் ராகவன் இயக்கியுள்ள பேண்டஸி திரைப்படம் 'மை டியர் பூதம்'. இந்த படத்தில் பிரபுதேவா ஜீனியாக நடிக்கிறார். நடிகை ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் அஷ்வத், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா ஆகிய 5 குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தை இந்தி, தெலுங்கிலும் டப்பிங் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
'மை டியர் பூதம்' படத்திற்கு தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் மை டியர் பூதம் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக தயாராக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.