< Back
சினிமா செய்திகள்
பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
24 July 2022 5:42 AM IST

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பஹீரா' படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த படத்தில் பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் 'பஹீரா' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்