பிரபுதேவாவின் புதிய படம்
|பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் தேள், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் வந்தன. கடந்த மார்ச் மாதம் பாஹீரா படம் வெளியானது. தற்போது 'பேட்ட ராப்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வேதிகா நடிக்கிறார்.
முனி, பரதேசி, காஞ்சனா 3-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வேதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படம் மூலம் தமிழ் படத்தில் நடிக்க வருகிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஜாஷோன், ரியாஸ்கான் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சினு டைரக்டு செய்கிறார். நகைச்சுவை நிரம்பிய பொழுதுபோக்கு படமாக தயாராகிறது. ஜோபி. பி. சாம் தயாரிக்கிறார். காதல், சண்டை காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் உருவாகிறது.