பிரபுதேவாவின் 60-வது படம்
|டைரக்டர் பிரபு தேவா நடிக்கும் 60-வது படம் குறித்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர், நடன இயக்குனர், டைரக்டர் அடையாளங்களுடன் இருக்கும் பிரபுதேவா 1994-ல் 'இந்து' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். காதலன், மின்சார கனவு, ராசய்யா, வி.ஐ.பி. மிஸ்டர் ரோமியோ, வானத்தைப்போல, ஜேம்ஸ் பாண்ட், சார்லி சாப்ளின், எங்கள் அண்ணா உள்பட பல முக்கிய படங்களில் நடித்து இருக்கிறார்.
போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களையும் டைரக்டு செய்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் தேள், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் வந்தன. இதுவரை 59 படங்களில் முடித்துள்ள பிரபுதேவா தற்போது தனது 60-வது படத்தில் நடிக்கிறார். இதில் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்துக்கு 'வுல்ப்' என்று பெயர் வைத்துள்ளனர். வினோ வெங்கடேஷ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.