< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது
|15 Dec 2023 11:06 PM IST
யாஷிகா ஆனந்த், , யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
சென்னை,
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். இந்த படத்தை ராஜேந்திர ராஜன் தயரிக்கிறார். டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது.
இந்த படத்திற்கு விநாயக மூர்த்தி இசையமைக்கிறார் படத்தில் யாஷிகா ஆனந்த், யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில் பிரபு தேவா - மடோனா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜாலியோ ஜிம்கானா' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Thanks Venkat Prabhu , sweet of u ❤️ https://t.co/W5HcuxzLQ3
— Prabhudheva (@PDdancing) December 15, 2023