< Back
சினிமா செய்திகள்
இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா
சினிமா செய்திகள்

இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா

தினத்தந்தி
|
30 Sept 2023 8:36 AM IST

படப்பிடிப்பிற்காக இலங்கையில் முகாமிட்டு உள்ள பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா தற்போது 'முசாசி' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். வி.டி.வி. கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, அருள்தாஸ், தங்கதுரை, நடிகை லியோனா லிஹ்சாய் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். ஷாம் ரோட்ரிக்ஸ் டைரக்டு செய்கிறார்.

இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. இதற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் படக்குழுவினரை கவுரவப்படுத்த இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்