< Back
சினிமா செய்திகள்
25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபுதேவா - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி
சினிமா செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபுதேவா - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி

தினத்தந்தி
|
22 March 2024 4:06 PM IST

ஏ.ஆர்.ரகுமான்- பிரபு தேவா கூட்டணி 6-வது முறையாக இணைந்துள்ளது.

சென்னை,

இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடன ஆளுமையால் கவர்ந்தவர் பிரபுதேவா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களை கற்று தேர்ந்த பிரபுதேவா திரையில் கூட்டத்தில் ஒருவராக நடன கலைஞராக தோன்றினார். நடன இயக்குநராக இருந்த போதிலும் அவரின் முகம் ஒரு நடன கலைஞராக அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பதிந்து போனது. மின்சார கனவு என்ற படத்தில் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா.. என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். அதில் பிரபுதேவா - கஜோல் நடனம் பெரிதும் பேசப்பட்டது.

அன்று முதல் இன்று வரை இந்திய அளவில் நடனம் என்றால் பிரபு தேவா தான் எனும் அளவிற்கு ஒரு பெஞ்ச் மார்க் செட் செய்தவர் பிரபுதேவா. இந்த நிலையில், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொல்லுசபா சாமிநாதன், குக்வித்கோமாளி தீபா ஆகியோரும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் ஏ.ஆர்.ரகுமான் -பிரபு தேவா இணையும் 6-வது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் -பிரபு தேவா 1994-ம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். ஷங்கர் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதற்கடுத்து லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகிய படங்களும் இவர்களது கூட்டணியில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் படத்தில் அர்ஜுன் அசோகன் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அவரும் இந்தப் படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்