ஷாருக்கானை குறிவைத்த பிரபாஸ்...சல்மான் கானை குறிவைத்த விஜய் தேவரகொண்டா?
|முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகின்றன.
சென்னை,
இந்திய சினிமாவில் அடிக்கடி முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகின்றன. அதன்படி, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் டங்கி படமும் பிரபாசின் சலார் படமும் நேரடியாக மோதின.
இதில், ஷாருக்கானின் டங்கி இந்தியில் அதிக வசூல் செய்திருந்தாலும், பிரபாஸின் சலார் உலகளவில் அதிக வசூலைப் பெற்றது. இதனையடுத்து, தற்போது வேறு இரு நடிகர்களின் இரு படங்கள் மோத உள்ளன.
அதன்படி, விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம் அடுத்த ஆண்டு மார்ச் 28, 2025 அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, 60 சதவீதம் முடிந்துவிட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பெயர் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தோடு சல்மான் கானின் சிக்கந்தர் மோத இருப்பதாக தெரிகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 30-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
8 வருடங்களாக வெற்றிப் படத்தைத் தராத சல்மான், முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மோதல் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,