< Back
சினிமா செய்திகள்
பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் முதல் பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
13 Dec 2023 11:16 PM IST

'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி "சூரியன் குடையை நீட்டி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதுரகவி எழுதியுள்ள இந்த பாடலை ஐரா உடுப்பி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்