< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபாஸ் நடிக்கும் 'புராஜெக்ட் கே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
|19 July 2023 5:58 PM IST
பிரபாஸ் நடிக்கும் 'புராஜெக்ட் கே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் 'புராஜெக்ட் கே' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் 2024-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் தீபிகா படுகோனேவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 'புராஜெக்ட் கே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.