< Back
சினிமா செய்திகள்
வாடகை வீட்டில் வசிக்கும்  பிரபாஸ்... மாதத்திற்கு இவ்வளவு வாடகையா ?
சினிமா செய்திகள்

வாடகை வீட்டில் வசிக்கும் பிரபாஸ்... மாதத்திற்கு இவ்வளவு வாடகையா ?

தினத்தந்தி
|
28 Feb 2024 8:10 PM IST

பிரபாஸ் லண்டனில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்,

நடிகர் பிரபாஸ் லண்டனில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலமான நடிகர்கள் பெரும்பாலும் வெளியில் சுதந்திரமாக செல்ல முடிவதில்லை. உணவகங்களில் உணவருந்தவோ அல்லது ஷாப்பிங்கில் ஈடுபடவோ முடியாது. படப்பிடிப்பின் போது கூட, அவர்கள் ஸ்டுடியோக்கள் அல்லது செட்டுகளுக்குள் மட்டுமே இருப்பார்கள். எங்கு சென்றாலும் ரசிகர்கள் திரண்டுவிடுவதால் பாதுகாப்பு பிரச்சினை உருவாகிறது. இதனால் நடிகர்கள் பலரும் ஓய்வு நேரங்களில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் லண்டனில் இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கி தனது ஓய்வு நேரத்தை அங்கு செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. வீட்டு வாடகைக்கு மாதம் ரூ. 60 லட்சம் செலவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சலார் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராஜாசாப் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் 'ராஜாசாப்' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா திரும்புகிறார்.

மேலும் செய்திகள்