பிரபாஸ், கிருத்தி சனோன் திருமண நிச்சயதார்த்தம்?
|பிரபாசுக்கும், நடிகை கிருத்தி சனோனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவருக்கும் மாலத்தீவில் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். அவரது படங்களை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் 'பான் இந்தியா' படமாக வெளியிட்டு வசூல் பார்த்து வருகிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் 'ராதே ஷியாம்' படம் வெளியானது. தற்போது 'ஆதிபுருஷ்', 'சலார்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அனுஷ்காவையும், பிரபாசையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள்.
தற்போது பிரபாசுக்கு 43 வயது ஆகிறது. இந்த நிலையில் பிரபாசுக்கும், நடிகை கிருத்தி சனோனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. இருவருக்கும் மாலத்தீவில் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் 'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் நிச்சயதார்த்தம் நடப்பதை இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. கிருத்தி சனோன் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.