< Back
சினிமா செய்திகள்
சர்ச்சையில் பிரபாஸ் படம்
சினிமா செய்திகள்

சர்ச்சையில் பிரபாஸ் படம்

தினத்தந்தி
|
23 July 2023 8:56 AM IST

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்துக்கு 'புராஜெக்ட் கே' என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு 'கல்கி 2898 ஏ.டி.' என தற்போது பெயரிடப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இதில் பிரபாசின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால் மோசமான கிராபிக்ஸ் பணிகளுக்காக அந்த தோற்றம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி புரொடக்சன்ஸ் அதனை நீக்கியது. தற்போது பிரபாசின் புதிய தோற்றம் வெளியாகி இருக்கிறது.

நீண்ட முடி, தாடியுடன் கவச உடை அணிந்த பிரபாசின் புதிய தோற்றத்தையும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். 'வேற நல்ல படங்களே கிடைக்கவில்லையா...', 'பிரபாசை வைத்து இன்னொரு 'ஆதிபுருஷ்' படமா?' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை அள்ளி தெளிக்கிறார்கள்.

இதனால் தயாரிப்பு நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். பிரபாஸ் படங்களுக்கு தொடர் சர்ச்சை ஏன்? என்பதும் புதிராகவே இருக்கிறது.

மேலும் செய்திகள்