< Back
சினிமா செய்திகள்
Prabhas, Amitabh Bachchan’s Kalki 2898 AD wins its first ever award amid box office rampage, Nag Ashwin reveals
சினிமா செய்திகள்

'கல்கி 2898 ஏடி' வென்ற முதல் விருது - யார் வழங்கியது தெரியுமா?

தினத்தந்தி
|
1 July 2024 12:56 PM IST

'கல்கி 2898 ஏடி' வெளியான 4 நாட்களில் ரூ. 550 கோடி வசூலித்துள்ளது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் - புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம், முதல்நாளில் உலகளவில் ரூ.191 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது 4 நாட்களில் உலகளவில் ரூ.550 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வசூலில் மிகப்பெரிய வெற்றிபெற்று வரும் 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு தற்போது முதல் விருது கிடைத்துள்ளது. அதனை பாகுபலி பட பிரபலம் ராணா டகுபதி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார். அதனுடன், 'இப்படம் இன்னும் பல விருதுகளை வெல்லும்' எனவும் வாழ்த்தியுள்ளார்.

மேலும் செய்திகள்