பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்பட டிஜிட்டல் உரிமை ரூ.250 கோடி?
|பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தை நெட்பிளிக்ஸ் ரூ. 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
#Prabhas: #HarGharTiranga Anthem pic.twitter.com/oQr4hIfpeU
— Prabhas (@PrabhasRaju) August 3, 2022
பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்களை பெரிய பட்ஜெட்டில் எடுத்து அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சயீப் அலிகான் ராவணனாகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளனர்.
ஆதிபுருஷ் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கிராபிக்ஸ், டப்பிங், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் வியாபாரம் நடந்து வந்த நிலையில் அனைத்து மொழிகளுக்கான ஆதிபுருஷ் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓ.டி.டி. தளம் நெட்பிளிக்ஸ் ரூ.250 கோடிக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெரிய விலை என்று தெலுங்கு திரையுலகினர் பேசுகிறார்கள்.