< Back
சினிமா செய்திகள்
அனுஷ்கா நடிக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படத்தின் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

அனுஷ்கா நடிக்கும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' படத்தின் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
4 March 2023 6:15 AM IST

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ என்ற படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகவும், அதே சமயம் அருந்ததி, பாகமதி உள்ளிட்ட ஹீரோயின் சார்ந்த படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் அனுஷ்கா. பாகுபலி படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், இந்தி ரசிகர்களிடமும் அனுஷ்கா பிரபலமானார்.

இதனிடையே 'இஞ்சு இடுப்பழகி' திரைப்படம் அவருக்கு பல பிரச்சனைகளை உருவாக்கியது. படத்திற்காக கூட்டிய எடையை அனுஷ்காவால் குறைக்க முடியவில்லை. பல நாட்களாக உடல் எடை குறைப்பு சிகிச்சை எடுத்து வந்தாலும், முன்பு போல் உடல் எடை குறைய முடியாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அனுஷ்கா மீண்டும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' என்ற படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நவீன் போலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் ஜாதி ரத்னாலு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்கி பிரபலமானார். இவர்கள் நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பை போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.


Presenting the first look of our film #MissShettyMrPolishetty It's been a while since I have seen u guys, only because we were working to bring u the best possible entertainment in theatres. Looking forward to the madness again in theatres this Summer 2023. Love you guys ❤️ pic.twitter.com/KzRS2ButSn

— Naveen Polishetty (@NaveenPolishety) March 1, 2023 ">Also Read:

மேலும் செய்திகள்