பிரபல பாடகர் சந்தன் ஷெட்டி-நிவேதிதா தம்பதி விவாகரத்து
|பிரபல பாடகர் சந்தன் ஷெட்டி - நிவேதிதா தம்பதி விவாகரத்து செய்து கொண்டனர்.
பெங்களூரு,
கன்னட தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளர்களாக பாடகர் சந்தன் ஷெட்டி மற்றும் வலைதள பிரபலம் நிவேதிதா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தசரா விழாவில், இளைஞர் தசராவில் இவர்கள் இருவரும் பங்கேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கானோர் முன்பு விழா மேடையில் தோன்றிய இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தார்கள்.
பின்னர் இந்த நட்சத்திர தம்பதி திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி நிவேதிதா தரப்பில் முதலில் விவகாரத்து கோரி பெங்களூரு சாந்திநகரில் உள்ள குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று குடும்பநல கோர்ட்டில் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தம்பதி சிரித்த முகத்துடன் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
இதற்கிடையே திருமணமானது முதல் தம்பதிக்கு குழந்தை ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தான் அவர்கள் விவாகரத்து கோரியதாக பேசப்பட்டு வருகிறது. எனினும் நட்சத்திர தம்பதியின் விவாகரத்தை ஏற்க முடியாத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் ஒன்றுசேரும்படி கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.