< Back
சினிமா செய்திகள்
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்
சினிமா செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்

தினத்தந்தி
|
26 March 2024 11:18 AM GMT

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சேசு.

சென்னை,

தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேசு (வயது 60). இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்தார்.

இந்நிலையில், நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்