< Back
சினிமா செய்திகள்
நடிகர் வடிவேலுவுடன் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் கால் கட்டை விரல் அகற்றம்!
சினிமா செய்திகள்

நடிகர் வடிவேலுவுடன் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் கால் கட்டை விரல் அகற்றம்!

தினத்தந்தி
|
15 Jun 2023 9:08 AM IST

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த காமெடி நடிகர் பாவா லட்சுமண்னின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டது.

சென்னை,

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடிக் காட்சிகளில் நடித்துள்ளார் பாவா லட்சுமணன். மாயி படத்தில் 'வா மா மின்னலு' என்ற காட்சிகள் இன்றுவரை பலரின் நினைவுகளில் இருக்கிறது.

சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்த பாவா லட்சுமணன், சக்கரை நோயால்/பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பிரபலமான பழைய நடிகர்கள் பலர், வருமானமின்றி மருத்துவ செலவுக்குகூட பணம் இல்லாமல் தவித்து வரும் சூழல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்