< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் பூஜை..!
சினிமா செய்திகள்

நயன்தாரா நடிக்கும் 'மண்ணாங்கட்டி' படத்தின் பூஜை..!

தினத்தந்தி
|
20 Sept 2023 11:14 PM IST

நடிகை நயன்தாரா நடிக்கும் 'மண்ணாங்கட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சென்னை,

யூடியூப் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி இயக்கும் திரைப்படம் 'மண்ணாங்கட்டி'. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் 'மண்ணாங்கட்டி' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்