< Back
சினிமா செய்திகள்
உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகை பூஜா குமார்...கமலுக்கான ஆதரவா?
சினிமா செய்திகள்

உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகை பூஜா குமார்...கமலுக்கான ஆதரவா?

தினத்தந்தி
|
20 April 2024 3:36 PM IST

உத்தம வில்லன் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய திரைப்படம் என லிங்குசாமி தெரிவித்த நிலையில், அந்த படத்திற்காகதான் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகை பூஜா குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

2000-ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் பூஜா குமார். மேஜிக் மேஜிக் 3டி எனும் தமிழ் படத்தில் நடித்த பூஜா குமார் அதன் பிறகு ஆங்கில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கமல்ஹாசன் இயக்கி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் பூஜா குமார். விஸ்வரூபம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், அந்த படம் விஸ்வரூபம் 2 என இரு பாகங்களாக வெளியாகின. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

"தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப் படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் திரு. கமலஹாசன் அவர்களை வைத்து first copy (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான 'உத்தம வில்லன்' எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்திய படமாகும். 'உத்தம வில்லன்' திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமல்ஹாசன் மீண்டும் ஒரு படம் நடித்துத் தருவதாக எழுத்துபூர்வமாக எங்களுக்கு உறுதி அளித்தனர். " என இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் அந்த படம் தொடர்பான அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், திடீரென அந்த படத்தில் நடித்த நடிகை பூஜா குமார் உத்தம வில்லன் படத்திற்காக கதகளி கெட்டப் போட்டு நடிச்ச வீடியோவை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பூஜா குமார் வெளியிட்டுள்ளாரா என கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்