< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டேவின் நம்பிக்கை
|9 Feb 2023 9:57 AM IST
தமிழில் ‘முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில்,
"வாழ்க்கையில் எதுவும் நமது கையில் இல்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு எந்த மாதிரி பலன் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் சில முடிவுகளின் பலன்கள் நமது கையில் நிச்சயம் இருக்காது.
ஏற்கனவே நான் நடித்த சில படங்கள் நன்றாக போகவில்லையே என்று கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் தவறு நடந்தால் அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து திருத்திக்கொள்வேன். தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களினால்தான் நான் இந்த நிலைமைக்கு உயர்ந்து இருக்கிறேன்.
சில நேரம் நாம் எதிர்பார்த்த பலன் வராமல் போகலாம். அதற்காக நாம் எடுத்த முடிவு தவறு என்று நினைக்கக்கூடாது. நாம் எடுத்த முடிவின் காரணமாக ஏதோ ஒருநாள் நமது வாழ்க்கை முழுமையாக மாறி நல்லது நடக்கும். அந்த நம்பிக்கையோடுதான் நான் முன்னேறுகிறேன்'' என்றார்.