படத்தில் இருந்து விலகிய பூஜா ஹெக்டே விளக்கம்
|தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக குண்டூர் காரம் என்ற படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் மகேஷ்பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே திடீரென்று விலகினார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை கிளப்பியது. தெலுங்கு படங்களில் நடித்து உயர்ந்த பூஜா ஹெக்டே இப்போது இந்தி படங்களில் நடிக்கவே முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால்தான் மகேஷ்பாபு படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
விலகலுக்கான காரணம் குறித்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பை ஆரம்பிக்க மிகவும் தாமதம் ஆகி வருவதால் ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே தான் இந்த படத்தில் இருந்து நான் விலகினேன்'' என்று கூறியுள்ளார்.