< Back
சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டேவின் லட்சிய கதாபாத்திரம்
சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டேவின் லட்சிய கதாபாத்திரம்

தினத்தந்தி
|
19 April 2023 7:26 AM IST

தமிழில் முகமூடி, பீஸ்ட் படங்களில் நடித்து பிரபலமான பூஜா ஹெக்டே இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து புஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், "திரையுலகில் எனது வெற்றி என்பது ஒரே இரவில் சுலபமாக நடந்து விடவில்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தேன். எனக்கு மொழி தெரியாது என்பதால் கஷ்டமாக இருந்தது. வசனங்களை உதவி இயக்குனர்களை பேச வைத்து பயிற்சி எடுத்தேன்.

சினிமாவில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். படங்கள் சரியாக ஓடாத நிலை இருந்தது. ஒரு வருடம் எந்த படவாய்ப்பும் வராமல் சும்மா இருந்தேன். எனக்கு ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு வரவில்லை. பிறகு திடீரென்று பட வாய்ப்புகள் குவிந்து பிசியாக நடிக்க தொடங்கினேன்.

இப்போது நான் வெற்றிபெற்ற நிலையில் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்கிறேன். சினிமா வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு முன்னேறி இருக்கிறேன். எனக்கு நிறைய லட்சிய கதாபாத்திரங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்