பையா 2-ம் பாகத்தில்... ஆர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே?
|பையா 2 படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்த 'பையா' படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனை லிங்குசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்து பட வேலைகளை தொடங்கி உள்ளார்.
பையா 2 படத்தில் கார்த்திக்கு பதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. இதனை ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனிகபூர் மறுத்தார். பையா 2 உள்பட எந்த தமிழ் படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறினார்.
இதையடுத்து பையா 2 படத்தில் நாயகியாக நடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பையா 2 படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். முகமூடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பையா 2 படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.