< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரூ.45 கோடியில் புதிய பங்களா வாங்கியுள்ள பீஸ்ட் பட நடிகை
|15 April 2024 9:25 AM IST
ரூ.45 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை பூஜா ஹெக்டே வாங்கியுள்ளார்.
மும்பை,
தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தார். தற்போது பாலிவுட் நடிகர் சாகித் கபூர் நடிக்கும் தேவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் புதிதாக பிரமாண்டமான பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீட்டின் மதிப்பு ரூ.45 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
மும்பையில் கடலை பார்த்தபடி இந்த பிரமாண்ட வீடு அமைந்துள்ளதாம். சமீபத்தில் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது ரூ.45 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றையும் வாங்கியுள்ளார்.