< Back
சினிமா செய்திகள்
படங்கள் தோல்வியால் வருந்தும் பூஜா ஹெக்டே
சினிமா செய்திகள்

படங்கள் தோல்வியால் வருந்தும் பூஜா ஹெக்டே

தினத்தந்தி
|
22 Oct 2022 8:20 AM IST

பூஜா ஹெக்டே நடித்த மூன்று படங்கள் தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் இருக்கிறார்.

தமிழில் ஜீவாவுடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்தியிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாசுடன் பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷியாம், சிரஞ்சீவியுடன் நடித்த ஆச்சார்யா ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. பீஸ்ட் படத்திலும் அவருக்கு வரவேற்பு இல்லை. இதோடு பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஜனகன படத்தில் பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் பிரமாண்டமாக தயாரித்த லைகர் படம் தோல்வி அடைந்ததால் அதில் இருந்து மீள முடியாத பூரி ஜெகந்நாத் ஜனகன படத்தை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தான் நடித்த மூன்று படங்கள் தோல்வி அடைந்ததால் ஜனகன படத்தின் மூலமாவது தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கருதிய பூஜா ஹெக்டேவுக்கு அந்த படத்தை கைவிட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது அவர் கைவசம் புதிய படங்கள் இல்லை. இதனால் வருத்தத்தில் இருக்கிறார். பூஜா ஹெக்டேவை வைத்து தரமற்ற படத்தை எடுத்ததாக அவரது ரசிகர்கள் பூரி ஜெகந்நாத்தை வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்