< Back
சினிமா செய்திகள்
பட அதிபரிடம் ரூ.2 கோடி காரை பரிசாக பெற்றேனா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
சினிமா செய்திகள்

பட அதிபரிடம் ரூ.2 கோடி காரை பரிசாக பெற்றேனா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்

தினத்தந்தி
|
17 April 2023 3:01 PM IST

பட அதிபர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் புஜா ஹெக்டேவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ரூ.2 கோடி காரை பரிசாக கொடுத்ததாகவும், அந்த காரிலேயே படப்பிடிப்புகளுக்கு செல்கிறார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. பூஜா ஹெக்டேவுக்கு விலை உயர்ந்த காரை எதற்கு பரிசாக கொடுத்தார் என்றும் கேள்விகள் எழுப்பினர்.

இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "என்னை பற்றி தொடர்ந்து தவறான வதந்திகள் வருகின்றன. நான் தயாரிப்பாளரிடம் இருந்து காரை பரிசாக பெற்றேன் என்பதும் வதந்திதான். என் பெற்றோர் கூட இதனை பார்த்து விட்டு கார் பரிசாக வாங்கியது உண்மையா என்று கேட்டனர்.

இப்படி எனக்கு எதிராக வரும் ஒவ்வொரு தவறான வதந்திகளுக்கும் என்னால் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது'' என்றார். பூஜா ஹெக்டே தற்போது இந்தி நடிகர் சல்மான்கான் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன.

மேலும் செய்திகள்