பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் டிரைலர் வெளியானது
|‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை,
கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அண்மையில் 'அக நக' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதையடுத்து 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.