இணையத்தில் வைரலாகும் 'பொன்னியின் செல்வன்' ஆந்தம்..!
|'பொன்னியின் செல்வன்' ஆந்தம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2' ஆகும். இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர். 'பொன்னியின் செல்வன் -2' படத்திற்காக பிரத்யேகமாக ஆந்தம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த 'பிஎஸ் ஆந்தம்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவா ஆனந்த் எழுதியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நபிலா மான் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.