< Back
சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் 3 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் சாதனை
சினிமா செய்திகள்

'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் சாதனை

தினத்தந்தி
|
3 Oct 2022 10:59 AM IST

'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.230 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2ஆவது நாள் வசூல், 70 கோடி ரூபாயை கடந்ததாக கூறப்படுகிறது.

3ஆம் நாளான நேற்று உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூலித்த தாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்