< Back
சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன்- 2 படத்தின் டிரெய்லர் இன்று இரவு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன்- 2 படத்தின் டிரெய்லர் இன்று இரவு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

தினத்தந்தி
|
29 March 2023 11:58 AM IST

பொன்னியின் செல்வன்- 2 படத்தின் டிரெய்லர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா புரொடக்ஷன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் -2ம் பாகத்தில் டிரைலர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்