< Back
சினிமா செய்திகள்
ரூ.300 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா செய்திகள்

ரூ.300 கோடி வசூலை கடந்த 'பொன்னியின் செல்வன் - 2' திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
8 May 2023 5:43 PM IST

'பொன்னியின் செல்வன் - 2' திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் - 2' திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்