< Back
சினிமா செய்திகள்
5 மொழிகளில் கமல் உதவியாளர் இயக்கும் அரசியல் படம்
சினிமா செய்திகள்

5 மொழிகளில் கமல் உதவியாளர் இயக்கும் அரசியல் படம்

தினத்தந்தி
|
25 Nov 2022 9:58 AM IST

டிபெண்டர் என்ற புதிய படத்தை கமல்ஹாசனிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய திரைப்பட கல்லூரி மாணவர் ரவிதேவன் டைரக்டு செய்கிறார்.

டிபெண்டர் என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்தை கமல்ஹாசனிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய திரைப்பட கல்லூரி மாணவர் ரவிதேவன் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே கள்ளத்துப்பாக்கி, நுங்கம்பாக்கம் ஆகிய படங்களை தயாரித்தவர். டிபெண்டர் படத்தில் தலைவன் படத்தில் நடித்து பிரபலமான பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்திரைச் செல்வன், மற்றும் ஜாக் புரொடக்‌ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கிறார்கள். படம் குறித்து டைரக்டர் ரவிதேவன் கூறும்போது, ``அரசியல் கதையம்சத்தில் டிபெண்டர் படம் தயாராகிறது. சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதியும், அது முறியடிக்கப்பட்டதா என்பதும் கதை. ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. இதில் அனைத்து மொழிகளிலும் இருந்து பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார்.

மேலும் செய்திகள்