'துணிவு' கான தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் - கட்டுப்பாடுகளை மீறியதால் போலீசார் தடியடி
|அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக உள்ளது.
கோவை,
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.
துணிவு படத்தின் முதல்காட்சி இன்று நள்ளிரவு இரவு 1 மணிக்கு தியேட்ட்டரில் வெளியாக உள்ளது. திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துணிவு திரைப்படத்தை காண அஜித் ரசிகர்கள் கோவையில் உள்ள தியேட்டர்களில் குவிந்துள்ளனர். அப்போது, போலீசார் விதித்த கட்டுப்பாடுகளை ரசிகர்கள் மீறினர். இதனால், தியேட்டர் முன் குவிந்திருந்த அஜித் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இதனால், கோவை தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.