56 வயதில் 46 வயது நடிகையை மடக்கிய லலித் மோடி...! விரைவில் 2வது திருமணம்...?
|ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் ) முதல் தலைவரான லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென்னுடனான தனது உறவை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தார். அவர் சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.அவர் தனது ஒரு டுவீட்டில் சுஷ்மிதா சென்னை தனது "சிறந்த பார்ட்னர்" என்று குறிப்பிட்டு உள்ளார்.ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் "டேட்டிங் மட்டும் செய்கிறார்கள்" என்றும் தெளிவுபடுத்தினார்.மேலும் அதுவும் ஒரு நாள் நடக்கும்" என்று அவர் ஒரு தனி டுவீட்டில் கூறி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் சென் "எனக்கும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இதைப் பற்றி நான் என் சகோதரியிடம் பேசுவேன்" என்று கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு, சுஷ்மிதா சென் தனது இளம் வயது காதலன் ரோஹ்மானை பிரிவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார். "நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம்! நீண்ட கால உறவு முடிந்தது... ஆனால் காதல் உள்ளது," என்று கூறி இருந்தார்.
முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சுஷ்மிதா சென் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997-இல் வெளியான நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். பின் முதல்வன் படத்தில் இடம்பெற்ற 'சக்கலக்கா பேபி' பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த் நிலையில் மாலத்தீவு சுற்றுபயணத்தில் இருந்த சுஷ்மிதா "நீங்கள் என் வாழ்க்கையின் காதல்" என்று கூறி உள்ளார். மேலும் பழைய வீடியோவை நாங்கள் பார்த்தேன் என கூறி உள்ளார். இது அவரது காதலரான லலித் மோடியை பற்றியே கூறியதாக கூறப்படுகிறது.
யார் இந்த லலித் மோடி...!
ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் தொழிலதிபரும், கிரிக்கெட் நிர்வாகியுமான லலித் மோடி. பின்னர் இந்தப் போட்டி உள்பட பல்வேறு பண மோசடி மற்றும் ஊழல் காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டநிலையில், லலித் மோடி லண்டன் தப்பிச் சென்றார்.
கடந்த 2009–ம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை வழங்குவதில் மோசடி செய்ததுடன், சட்டவிரோத பண பரிவர்த்தனையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2012–ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் ஒத்துழைக்குமாறு தற்போது லண்டனில் இருக்கும் லலித் மோடிக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒத்துழைக்க மறுத்ததால் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் லலித் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 'பிடிவாரண்டு' பிறப்பிக்குமாறு மனுத்தாக்கல் செய்தது. அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் 'பிடிவாரண்டு' பிறப்பிக்கப்பட்டது.
56 வயதான லலித் மோடிக்கு, ஏற்கனவே மினால் என்பவருடன் திருமணமாகி விவாகாரத்து ஆகிவிட்டது. இந்த தம்பதிக்கு ஆலியா மோடி என்ற மகளும், ருச்சிர் மோடி என்ற மகனும் உள்ளனர்.