< Back
சினிமா செய்திகள்
ஆன்லைனில் கசிந்த ஆடுஜீவிதம் படம் - இயக்குனர் புகார்
சினிமா செய்திகள்

ஆன்லைனில் கசிந்த 'ஆடுஜீவிதம்' படம் - இயக்குனர் புகார்

தினத்தந்தி
|
2 April 2024 7:20 AM IST

'ஆடுஜீவிதம்' படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம்'ஆடுஜீவிதம்'. இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், 'ஆடுஜீவிதம்' திரைப்படம் ஆன்லைனில் கசிந்துள்ளதாக இயக்குனர் பிளஸ்சி, எர்ணாகுளம் சைபர் செல் பிரிவில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்துள்ள அந்த புகாரில், படம் வெளியான கடந்த 28-ம் தேதியே படத்தின் நகல் இணையத்தில் கசிந்துள்ளது. இது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்பை ஏற்படுத்தும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கனடாவில் படத்தின் நகல் தோன்றியதாக தகவல் வந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அது குறித்தான ஆதரங்களையும் அவர் வழங்கியுள்ளார். அதில், தனிநபரின் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல் மற்றும் ஒரு தியேட்டரில் பதிவு செய்யப்பட்ட 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தின் வீடியோவும் இருந்துள்ளது. இது குறித்து சைபர் செல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்