< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
படமாகும் மாணவர்களின் குறும்புத்தனங்கள்
|24 Feb 2023 12:06 PM IST
`குண்டான் சட்டி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவருக்கு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டீஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். அவர் கள் வளர்ந்ததும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர மூங்கில் படகில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். இருவரும் ஊருக்கு திரும்பும்போது அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடியாட்களை வைத்து தூக்கிச் செல்கிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட்டார்களா? என்பதே கதை. மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்கள், குறும்புத்தனங்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக தயாராகி உள்ளது. 7-ம் வகுப்பு மாணவி அகஸ்தி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இசை: எம்.எஸ்.அமர்கித், தயாரிப்பு: எஸ்.ஏ. கார்த்திகேயன்.