< Back
சினிமா செய்திகள்
பிச்சைக்காரன் -2 படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் -2 படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
20 Dec 2022 5:36 PM GMT

இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை,

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்