< Back
சினிமா செய்திகள்
ஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்
சினிமா செய்திகள்

ஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்

தினத்தந்தி
|
2 Jan 2023 2:23 PM IST

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சமீபத்தில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வியக்கவைக்கும் கட்டுடலில் இருக்கும் ஹிருத்திக் ரோஷனின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்