காலில் கட்டுடன் நடிகை குஷ்பூ வெளியிட்ட புகைப்படம்
|பிரபல நடிகை குஷ்பு தனது காலில் கட்டு போட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை,
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பூ. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
நடிகை குஷ்பூ தன்னுடைய காலில் கிரிப் பேண்ட் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காலில் கட்டு போட்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு 'நான் மற்றும் என்னுடைய பெஸ்டி மிகசிறந்த காம்போ' என பதிவிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என பதட்டத்துடன் கேட்டு வருவதோடு... கூடிய விரைவில் குணமடைய தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.