சமந்தா பகிர்ந்த தத்துவம்
|தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சைப்பெற்று தற்போது தேறி இருக்கிறார். அதோடு மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் சமந்தா ஏற்கனவே நடித்த சாகுந்தலம் புராண படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதில் அவர் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் சமந்தாவை சிலர் விமர்சித்து பேசி வந்தனர்.
இதையடுத்து சமந்தா வலைத்தளத்தில் "கடமையை செய்வது மட்டுமே உங்கள் பணி. அதற்கு கிடைக்கும் பலனை எதிர்பார்க்க முடியாது. நல்ல பலன்கள் மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பேராசையோடு ஒருவர் செயல்களை செய்யக்கூடாது'' என்ற பகவத் கீதையின் தத்துவ வார்த்தைகளை மேற்கோள் காட்டி பகிர்ந்து இருக்கிறார்.
தற்போது குஷி தெலுங்கு படத்திலும், சிட்டாடல் வெப் தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். இவற்றில் நடித்து முடித்துவிட்டு உடல் நலனை கருத்தில் கொண்டு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருக்க முடிவு செய்து இருக்கிறார்.