< Back
சினிமா செய்திகள்
வீண் மாயை வேரறுக்க மானுடத்தின் திசை திறக்க வருகிறான் - வைரலாகும் மாமன்னன் டிரைலர்
சினிமா செய்திகள்

வீண் மாயை வேரறுக்க மானுடத்தின் திசை திறக்க வருகிறான் - வைரலாகும் 'மாமன்னன்' டிரைலர்

தினத்தந்தி
|
16 Jun 2023 6:28 PM IST

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'மாமன்னன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்