< Back
சினிமா செய்திகள்
வலி நிவாரணி தான் காரணமா..? பிரண்ட்ஸ் வெப் தொடர் நடிகர் மரணத்தில் புதிய திருப்பம்
சினிமா செய்திகள்

வலி நிவாரணி தான் காரணமா..? 'பிரண்ட்ஸ்' வெப் தொடர் நடிகர் மரணத்தில் புதிய திருப்பம்

தினத்தந்தி
|
17 Dec 2023 7:43 PM IST

நடிகர் மேத்யூ பெர்ரி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க்,

உலகளவில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்று பிரண்ட்ஸ். 1994ஆம் ஆண்டுதான் இந்த வெப் தொடர் முதன் முதலில் ஒளிபரப்பாக துவங்கியது.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2004 வரை 10 சீசன்களாக பிரண்ட்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த வெப் தொடரில் ஜெனிபர் அனிஸ்டன், கோர்டனி காக்ஸ், லிசா குட்ரா, மாட் லெபிளாங்க் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி (வயது 54) கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் மரணத்திற்கு நீச்சல் குளத்தில் அதிக நேரம் இருந்ததே காரணமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகர் மேத்யூ பெர்ரி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்து கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கு கெட்டமைன் எனப்படும் வலி நிவாரணி மாத்திரை அதிகளவு எடுத்து கொண்டதே காரணம் என்றும், அதன் காரணமாக இதயம் பாதித்து மயக்கம் ஏற்பட்டு நீச்சல் குளத்தில் மூழ்கி மரணமடைந்து உள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்