< Back
சினிமா செய்திகள்
ஒரு கையில் பெரியார்... மற்றொரு கையில் பிள்ளையார் - வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
சினிமா செய்திகள்

ஒரு கையில் பெரியார்... மற்றொரு கையில் பிள்ளையார் - வைரலாகும் 'வணங்கான்' பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

தினத்தந்தி
|
25 Sept 2023 10:36 PM IST

பாலா இயக்கும் 'வணங்கான்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'வணங்கான்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் அருண் விஜய் உடல் முழுவதும் சகதியுடன் ஒரு கையில் பெரியார் சிலையையும் மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகள்