< Back
சினிமா செய்திகள்
பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ் காலமானார்
சினிமா செய்திகள்

'பென்சில்' பட இயக்குனர் மணி நாகராஜ் காலமானார்

தினத்தந்தி
|
25 Aug 2022 7:20 PM IST

'பென்சில்' படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

சென்னை,

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவியாளராக இருந்த இவர், 'பென்சில்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

'பென்சில்' திரைப்படத்தை தொடர்ந்து கோபிநாத், சீதா, அனிகா சுரேந்திரன், வனிதா விஜய்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் "வாசுவின் கர்ப்பிணிகள்" என்ற படத்தை மணி நாகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியானது.

இந்த நிலையில் இவரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள், திரைபிரபலங்கள் எனபலரும் இயக்குனர் மணி நாகராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்