< Back
சினிமா செய்திகள்
ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம்
சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம்

தினத்தந்தி
|
21 Sept 2024 1:26 PM IST

கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றுள்ளது.

சென்னை,

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.

உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிட்டது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.

இந்த நிலையில் இப்படம் இன்று கேரளா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விநியோக உரிமையை ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா வாங்கியுள்ளது. கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இப்படம் இப்போது ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் நுழைவுத் தேர்வாக இது தேர்வு செய்யப்படாவிட்டால், எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்போம் என்று நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்