அனைத்து மாவட்டங்களிலும் காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்துங்கள் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
|அனைத்து மாவட்டங்களிலும் காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்துங்கள் என்று ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நம்முடைய மக்கள் இயக்க தலைவர் விஜய் சொல்லுக்கிணங்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு நமது மக்கள் இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும் தங்கள் மாவட்டத்தில் நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய தலைவர்கள், நகர தலைவர்கள், பகுதி தலைவர்கள் தங்களுடன் செயல்படும் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இயக்க கொடியுடன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும்.
தங்கள் மாவட்டத்தில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் இரண்டு போட்டோக்கள் மற்றும் தியாகிகளை கவரவப்படுத்தும் 2 போட்டோக்கள் மட்டும் 90039 33964 வாட்ஸ்அப் நம்பரில் மற்றும் thalapathyvmi@gmail.com இ-மெயிலில் அனுப்புமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.