யார் பெரிய நட்சத்திரம் ? - பிரபல தயாரிப்பாளர் பதில்
|அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்றவர்களில் யார் பெரிய நட்சத்திரம்? என்பது பற்றிய விவாதங்கள் இப்போதும் நடந்துவருவதாக டகுபதி சுரேஷ் பாபு கூறினார்.
சென்னை,
பிரபல தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபு. இவர் தெலுங்கில் பல படங்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர்களில் யார் பெரிய நட்சத்திரம் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'ஒரு நட்சத்திரமோ அல்லது இயக்குனரோ ஒரு படத்தை தனியாக வெற்றியடைய செய்ய முடியாது. ஒரு நட்சத்திரம் ஒரு சிறந்த இயக்குனருடன் இணைந்து பணிபுரிவது படத்தை மேலும் ஒரு படி வெற்றிக்கு வழிவகுக்கும். தெலுங்கு சினிமாவில், பவன் கல்யாண், பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நட்சத்திரங்கள் தனியாக அதிக வசூல் செய்யும் படங்களை வழங்க முடியும் என்று நினைக்கிறேன்.
இருப்பினும், அது படத்தின் கதை, நடிகர் மற்றும் இயக்குனரின் கலவையைப் பொறுத்தது. அஜித் குமார், விஜய், ரஜினிகாந்த் ஆகியோர்களில் யார் பெரிய நட்சத்திரம் என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றன' என்றார்.